பக்கம்:நலம் தரும் நாட்டு மருந்துகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10



சிலேட்டுமம் + வாதம் = வாய் குழறும். விழி மேலோடும். 
                         பிடரி வலிக்கும். 
                         நரம்பெல்லாம் வலிக்கும். 

சிலேட்டுமம் + பித்தம் = கசப்புண்டாகும். பேச்சுத் 
                         தடுமாறும். கபங்கட்டும், 
                         குரல் வேறுபடும். கண்ணிற் 
                         பீளே கிற்கும். 

சிலேட்டுமம் +சிலேட்டுமம் = விழி வட்டங்கொள்ளும்.
                             இறுதிநிலை ஏற்படும். 

வாதத்தில் இரண்டு பங்கும் பித்தம் ஒரு பங்கும் இருந்தால் வாதபித்த ரோகமாம். வாய்வு மிகுதியாகும். மாதரை இச்சிக்கும் அவா ஏற்படும்.

பித்தம் இரண்டு பங்கும் வாதம் ஒரு பங்குமோடில் பித்தவாதரோகமாம், உஷ்ணம் மிகும். கண்ணெரியும். வாய் கசக்கும். பசிதாகமுண்டாகும்.

வாதம் இரண்டு பங்கும் சிலேட்டுமம் ஒரு பங்குமானல், பித்தசிலேட்டுமரோகமாம். வயிறு பொருமும். மந்திக்கும். தினவு ஏற்படும். தல வறண்டு இருக்கும். பிடரி நோகும்.

சிலேட்டுமம் இரண்டு பங்கும் வாதம் ஒரு பங்குமானல் சிலேட்டுமவாதரோகமாம். தலைநோய் ஏற்படும். அன்னம் செரியாதிருக்கும். உமிழ்நீர் இனிக்கும்.

சிலேட்டுமம் இரண்டு பங்கும்பித்தம் ஒரு பங்குமானல் சிலோட்டுமபித்தரோகமாம். உடல் குளிரும். கூசும்.

நாடிவிளக்கத்தின் கூறுகள் இதுவே. காடி ஸ்தானங் களையும், நாடியைப் பிடிக்கும் விதத்தையும், பார்க்கும் விதத்தையும், அதன் கூறுகளையும் பார்த்தோம்.