பக்கம்:நலம் தரும் நாட்டு மருந்துகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11



பொதுவாக நோயாளிக்கு மருந்து கொடுக்கு முன் அவன் வயதையும் வாத, பித்த, சிலேட்டும குணங்களையும் அறிதல் வேண்டும். நோய் காலத்தில், மலகிவர்த்தி, உண்டா என்பதையும், தீவனச்க்தி உண்டா என்பதையும் நாடிநிலையையும் பார்த்தறியவேண்டும்.

வயதுக்குத் தக்கபடியும் குழந்தைகளுக்குத் தகுந்த படியும் அளவறிந்து மருந்து கொடுக்கவேண்டும். சனி, புதன், திங்களில் மருந்து கொடுக்க ஏற்றது அல்ல வென்பர். செவ்வாய், வியாழனில் கொடுக்க உத்தமமாம்.

மருத்தூட்டுங் காலம்

அனிலகோ யர்க்கன மாகாமுன் பித்தத்
துனியர்க் கசனநடு துரயை-யெனுநோயர்க்
காகாரப் பின்னு மருந்திலுறை யப்பிணியாற்
சாகாரப் பின்னுலகிற் றான்.

வாத ரோகிகள் உண்ணுங்காலத்திற்கு முன்னும், பித்தரோகிகள் பாதி உணவு கொண்டவுடனேயும், சிலேட்டுமரோகிகள் ஆகாரத்திற்குப் பின்னும் ஒளடதம் உண்ணக் கொடுத்தால் அந்த வியாதியிஞலே சமுத்திரஞ் சூழ்ந்த உலத்தில் அவர்கள் இறக்கார்கள்.

மருந்துண்ட பின்பு வாயிலிடும் பொருள்கள்

சீவற் கனமதுதி ராட்டை தும்பை மூக்கு கிராம்
பூவற் சரகெற் பொரிசசித்துட்-பூவி
னிருந்துண்ட நீர்மைகுன்ரு தேற்றுமேன் மக்கண்
மருந்துண்ட வாய்க்கினவயா மால்.