பக்கம்:நலம் தரும் நாட்டு மருந்துகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



2. ஆகார நியதிகள்

ஒரு வேளை உண்ட உணவில் பிரிந்த அன்ன ரசமானது அன்றே ரச தாதுவை நனைத்து ஊறி கின்று ரச தாதுவில் ஏறும். முன்னர் உண்டது ரத்த தாதுவில் ஏறும்.

இரண்டாவது நாள் ரச தாதுவிலிருந்து ரத்த தாது வில் ஏறும். மூன்ருவது நாள் மாமிச தாதுவில் ஏறும், நான்காவது நாள் மேதோ தாதுவில் ஏறும். ஐந்தாவது நாள் அஸ்தி தாதுவில் ஏறும், ஆருவது நாள் மச்சை தாதுவிலும், ஏழாவது நாள் சுக்கில தாதுவிலும் ஏறும். தேக வலிவு பெறும். இத் தாதுதான் சுக்கில தாதுவாகும்.

ஆகாரம் உண்ணும்போது மதுரமான உணவை உண்டு இடையில் புளிப்பு, உப்பு, உறைப்பு வகைகள் இருக்கவேண்டும். இறுதியில் துவர்ப்பு, புளிப்புத் தயிர், ஊறுகாய் முதலியவைகளைச் சாப்பிடவேண்டும்.

பத்தியத்திற்கேற்ற உணவு வகைகள்

அவரைப் பிஞ்சு, அத்திப் பிஞ்சு, முருங்கைப் பிஞ்சு, முள்ளம் பிஞ்சு, வழுதுணம் பிஞ்சு, கண்டங் கத்தரிப்