பக்கம்:நலம் தரும் நாட்டு மருந்துகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15


வாத தேகிகளுக்குரிய வகைகள்

கத்தரிக்காய், பூசணிக்காய், வழுதுணங்காய், முருங் கைப் பிஞ்சு, மிதிபாகல், வெள்ளவரை, கருணைக் கிழங்கு, காராக் கருணையும், கீரை வகைகளில் ஆரை, நல்வசளை, முசிமுசுக்கை, அப்பக் கோவை, பூக்குரட்டை, மணத் தக்காளி, யானை நெருஞ்சியும், ரச வகைகளில் பாகல், முருங்கை, முளைக்கீரை, தூதுவளை, பொன்னுங்கண்ணி, வெள்ளவரை, காட்டுப் பிரண்டை, மணத்தக்காளியும், ஊறுகாய்களில் உப்பிட்ட இஞ்சி, காரத்தையும் கொள்ள வேண்டும்.

பித்த தேகிகளுக்குரிய வகைகள்

மிதிபாகல், கொம்பு பாகல், வெள்ளரிக்காய், அவரைக்காய், பீர்க்கங்காய், கத்தரிக்காய், முருங்கைக் காய், வாழைக்காய், புடலங்காய், பூசணிக்காய், வள்ளிக் கிழங்கு, வாழைத்தண்டு, வெங்காயம் சேர்க்கலாம்.

கீரை வகைகளில் முருங்கை, வசலே, கோவை, புளியாரை, அப்புக்கோவை, சிறு கீரை, முசுமுசுக்கை, வல்லாரை, மணத்தக்காளி, தூதணம் முதலியவைகளும், ரச வகைகளில் கொடி வசலே, வெள்ளே அகத்தி, கொத்து வசலையும், வற்றல்களில் தூதணம், கண்டங் கத்தரி, பயற் றங்காய், மணத்தக்காளி, பேய்ப்புடல், வெண் முள்ளியும், ஊறுகாய்களில் பச்சை மிளகு, தூதணம், இஞ்சி, நாரத்தை, எலுமிச்சை, நெல்லிக்காயும் கொள்ளலாம்.

சிலேட்டும தேகிகளுக்கு

அவரைக்காய், கத்தரிக்காய், கொம்பு பாகல், மிதி பாகல், கண்டங்கத்தரி, அத்திக்காய், பலாப் பிஞ்சு,