பக்கம்:நலம் தரும் நாட்டு மருந்துகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3. குழந்தை நோய்கள்
மாந்த வகைகள்

நாம் உண்ணும் உணவுக்கேற்றபடி உடலின் தன்மைகள் இருக்கும். ஒவ்வொரு தானியத்திற்கும், காய் கறிக்கும் ஒவ்வொருவிதமான தன்மை உண்டு. இளைஞர் களைவிடக் குழந்தைகள் இவ்வகையில் அதிகக் கவனமுடன் இருக்கவேண்டும். முக்கியமாகத் தாய்மார்கள் இவ்விஷ பத்தில் கவனமாக இல்லாமல் இருந்தால் குழந்தைகளின் உடம்பு பாதிக்கப்படும். செரிமானமாகாதவற்றைச் சாப் விடக்கூடாது. வாய்வுப் பண்டங்களை விலக்கவேண்டும்.

குழந்தைகளுக்குப் பால் கொடுக்கும் மாதர்கள் இது சம்பந்தமான விதிகளைப் பின்பற்றாவிட்டால் பின்வரும் மாந்தங்கள் ஏற்படலாம்.

வாத மாந்தம் நீர்க்கண மாந்தம்
பித்த மாந்தம் சுர மாந்தம்
சிலேட்டும் மாந்தம் கட்டு மாந்தம்
விஷ மாந்தம் வாலை மாக்தம்
துலை மாந்தம் எரி மாந்தம்
போர் மாந்தம் வலிப்பு மாந்தம்