பக்கம்:நலம் தரும் நாட்டு மருந்துகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24


2. ஓமம், திப்பிலி, கருஞ்சீரகம், நற்சீரகம், சுக்கு, கொத்தமல்லி, ஆமை ஓடு வகைக்கு ஓர் விராகனிடை எடுத்து நன்றாகத் தண்ணீர்விட்டு அரைத்து மாத்திரைகளாக உருட்டிக்கொள்ளவும். இவைகளை வெந்நீரில் கலந்து மூன்று நாள் காலை மாலை கொடுக்கவும்.

3. நொச்சி பொடுதலை நுணா வேலிப் பருத்தி இவைகளை வகைக்கு ஒரு பிடி எடுத்து நன்றாகக் கழுவி நறுக்கி வெதுப்பிச் சாறு பிழிந்து கொடுக்கவும்,

ஊது மாந்தத்தின் குணம்

குழந்தையின் உடல் பருத்து இருக்கும். சுரம் தோன்றும். வாந்தி பண்ணும். வயிறு இரையும். தொண்டை வலிக்கும். கழிச்சலும் இருக்கும்.

1. வேலிப் பருத்தியிலையை வதக்கிச் சாறு பிழிந்து எடுத்துக்கொள்ளவும். அதில் கடுகு, சீரகம் சமமாக எடுத்து அரைத்துக் கொள்ளவும். முலைப்பால் சங்கு அளவு எடுத்துக் கலந்துகொடுக்கவும்.

2. அதிமதுரம் திப்பிலி உள்ளி கோரோசனை வகைக்கு ஒரு கழஞ்சு எடுத்துக்கொள்ளவும். இவைகளைக் கோழி முட்டையின் வெண் கருவால் அரைக்கவும். சங்கு அளவு முலைப்பாலில் கலந்து காலையில் மூன்று தினமும் கொடுக்கவும்.

சுழி மாந்தக் குணம்

நித்திரை இருக்காது. விக்கல் எடுக்கும். இரைப்பும் சுவாசமும் இருக்கும். சுரமிருக்கும்.