பக்கம்:நலம் தரும் நாட்டு மருந்துகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27


4. வேலிப் பருத்தி இலையை நன்ருக வதக்கிப் பிழிந்து மிளகு, பூண்டு, வசம்பு வெதுப்பி அரைத்துக் கலக்கி அதில் நெய் ஒரு துளி விட்டுக் கொடுக்கவும்.

முக்கு மாந்தக் குணம்

குழந்தை முக்கி முக்கி சீதலமாய்க் கழியும். சுரம் இருக்கும். பின் கால் வீங்கும், தாகமெடுக்கும், உடல் இளையும். கஸ்தூரி எண்ணெயைப் பாதிச் சங்களவு கொடுக்கலாம்.

போர் மாந்தத்தின் குணம்

குழந்தை மயங்கும், தலையை அசைக்கும், வாந்தி பண்ணும், மார்பு துடிக்கும், மேனி வாடும், நரம்பு புடைக்கும், தாக மிகும், கண் குழியும், வாயும் நெஞ்சும் உலரும், குழந்தை பால் குடிக்காது.

1. சீரகம், கிம்பவிரை, பேய்ப்பீர்க்கம் வேர், கிராம்பு, வசம்பு, மயிலிறகின் சுட்ட சாம்பல் இவைகளைச் சமபாக மாக எடுத்தரைத்து முலைப்பாலில் கலக்கிக் கொடுக்கவும்.

2. ஓமத்தை வறுத்துப் பின் பொடி செய்து முலைப் பாலில் கலந்தும் கொடுக்கலாம்.

வாள் மாந்தத்தின் குணம்

உடல் வெளுக்கும். வலிப்பு, கடுப்பு இருக்கும். ஆடு தீண்டாப்பாளேச்சாறும் வேளை மணத்தக்காளி, கரிசாலை கழற்சி துளசி நீலி இவற்றினிலைகளை ஓர் கிறை யாய் எடுத்து, இடித்துச் சாறு எடுத்து பசுநெய் ஒரு பலம் கூட்டி அதில் கஸ்தூரி மஞ்சள், கருஞ்சீரம், கடுகு ரோகணி, கோஷ்டம் வகைக்கு ஓர் வராகன் எடை யெடுத்துப் பொடி செய்து பதமாகக் காய்ச்சி வைத்துக்