பக்கம்:நலம் தரும் நாட்டு மருந்துகள்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2


கரு உருவாகும்போது இதில் எத்தன்மை மிகுதியாக இருக்கிறதோ அவ்வண்ணமே குழந்தை இருக்கும். வாதத் தன்மை அதிகமாக இருந்தால் வாதத்திரேகமாகவும், பித்தத் தன்மை அதிகமாக இருந்தால் பித்தத் திரேகமாக வும் பிறப்பது இயல்பு.

வாதத்தின் இயல்புகள்

உடல் குளிர்ந்து இருக்கும். பருமனுக இருக்கும். தேகம் அதி மந்தமாகவும் அசதியாகவும் இருக்கும். காடி மெதுவாய் நடக்கும். சோம்பல் காரணமாக அடிக்கடி கொட்டாவி வரும். மலக்கட்டு உடையவராகவும் இருப்பர்.

பித்தத்தின் இயல்புகள்

உடல் வெப்பமாக இருக்கும். திடமனத்தினராய் இருப்பர். எக்காரியத்தையும் செய்யும் வல்லமை உண்டு. இளமையில் கரையுண்டாகுமெனினும் சக்தியுடனிருப்பர். இதமான வார்த்தையும் மிதமான காமமுமுடையவராக இருப்பர். எதையும் ஆராயும் தன்மையுடையவர்கள். காடி விரைவாக இருக்கும்.

சிலேட்டுமத்தின் இயல்புகள்

உடல் பலவீனமாக இருக்கும். இகத்தைவிட பரத்தையே நாடுவர். பக்தி மார்க்கத்தில் கின்றும் பெண் மையை வெறுத்தும் இருப்பர். பொய், களவு இருக்காது. காடி அதிக மிரட்சியாக இருக்கும்.

வாத பித்த சிலேட்டும நிலை

அபான முதல் உந்தி வரை வாத நிலை
உந்தியின் மேல் மார்பு மட்டும் பித்த நிலை
 மார்பு முதல் உச்சிவரை அய்ய நிலை.