பக்கம்:நலம் தரும் நாட்டு மருந்துகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4. பல்வகைப் பிணிகள்
ருதுவாக

கொள்ளை அவித்து அதில் பெருங்காயமும் தனித் துக் கலக்கி அத்தண்ணீரைக் குடிக்கவும், எஞ்சிய கொள்ளே உண்ணவும். ருதுவாகாவிடில் மீண்டும் இதே மாதிரி சாப்பிடவும்.

சொரி சிரங்கு போக

நன்றாக முற்றிய பூவரசன் பட்டையை மேற்பாகத் தைச் சுரண்டி நீக்கி உட்பாகத்தை இடித்து வஸ்திரகாயம் செய்து தண்ணீரில் கலந்து காலை மாலை இருவேளை குடித்து வரவும். சொரி, சிரங்கு, மேகப்படை யாவும் நீங்கும்.

பித்த சோகைக்கு

.

முள்ளங்கி இலையின் காம்பு, நரம்புச் சாறு எடுத்து அதில் தேன் கலந்து காலே மாலே உண்டு வரவும்.

சீரகம், நெல்லி முள்ளி, சுக்கு, ஏலம் இவைகளைச் சூரணம் செய்து சர்க்கரை கலந்து, தேனிலிழைத்துக் காலை மாலே கால் டீ ஸ்பூன் அளவு உட்கொள்ளவும்.