பக்கம்:நலம் தரும் நாட்டு மருந்துகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34


நீர்க்கட்டிற்கு

தக்காளிச் சாறும் நல்லெண்ணெயுங் கலந்து ஏழு நாள் காலையில் உட்கொள்ளவும். நீர்க் கட்டு கின்று விடும். கடும் பத்தியமாய் இருக்கவேண்டும்.

இரத்த காசத்திற்கு

கலியாண முருக்கிலேயும், மிளகும், அரிசியும் சேர்த்து அரைத்து அடைசுட்டு அதைச் சுடச்சுட நெய்யில் துவைத்து உட்கொண்டு வரவும். இரைப்பு, இருமல், இரத்த காசம் தீரும். -

வெள்ளைக்கு

வெள்ளறுகு, மிளகு, வெள்ளைப் பூண்டு மூன்றும் சேர்த்தரைத்துச் சிறு கரண்டியளவு மூன்று நாள் உட்கொள்ளவும். கடும் பத்தியமாக இருக்கவேண்டும்.

காது நோய் தீர

கொஞ்சம் மிளகையும் வெள்ளைப்பூண்டையும் நசுக்கி அதன் சாற்றைக் காதில்விட கொஞ்சம் எரிவு இருக்கும், பின் குளிர்ந்துவிடும். காதில் சீழ் வருதல், காது குத்தல் யாவும் தீரும்.

மகோதரத்திற்கு

பீர்க்கங்காயை இடித்துச் சாறு எடுத்து அதில் பெருங் காயம் சேர்த்து உண்டு வரவும். நீராம்பல், நீர்க்கோவை முதலியன தீரும். பத்தியமில்லை.

சோகைக்கு

சீரகத்தையும், நெல்லிக்காய் வற்றலையும் உலர்த்தித் தூள் செய்து காலையும் மாலையும் ஒரு வாரம் உட்கொள்ளக்