பக்கம்:நலம் தரும் நாட்டு மருந்துகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேர்வை நாற்றம் போக

உடலில் கசியும் வேர்வை நாற்றம் போக தினமும் குளிக்கும் போது பாசிப்பயறு மாவைத் தேய்க்க வேண்டும்.

சோகைக்கு

கரிசலாங்கண்ணியிலையில் கொஞ்சம் மிளகும், பூண்டும் அரைத்து நெல்லிக்காய் அளவு மூன்று நாள் காலையில் உட்கொள்ளவும். .

நெஞ்சுச் சளி அகல

நெஞ்சுத் தடுமன், கபரோகம் போன்ற நோய்களுக்குச் சுட்ட கோணிச் சாக்கின் சாம்பலே நெய் அல்லது கல்லெண்ணெயில் கரைத்து நெஞ்சில் பூசி வரவேண்டும். சளி அகன்றுவிடும். .

- விக்கலுக்கு - சுக்கு, திப்பிலி, லவங்கப்பட்டை வகைக்கு மூன்று. பலம் எடுத்து அரைப்படிரிேல் போட்டு கன்ருகக் காய்ச்சிக் காலையிலும் மாலையிலும் இரண்டு அவுன்ஸ் வீதம் உட் கொண்டால் விக்கல் தீரும், ... “.... . . ;

. தாது விருத்திக்கு

பசும்பாலே உடனே கறந்து நான்கு அவுன்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் ஒன்றரை அவுன்ஸ் கலப்பில்லாத சுத்தத் தேனைக் கலக்க வேண்டும். காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் தனது விருத்தி ஏற்படும்.