பக்கம்:நலம் தரும் நாட்டு மருந்துகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

கோழையை நீக்க குப்பை மேனிச்சாறு எடுத்து குழந்தைகட்குப் புகட் டினுல் கோழைகளை அறுக்கும். -

குழந்தை நோய்கட்கு - நெருஞ்சியான் வேரைச் சூரணம் செய்து தேனில் வெறுகடி வீதம் குழப்பித் தின்னக் குழந்தைகள் நோய் தீரும்.

உடல் எரிச்சல் தீர சீத்தாப் பழத்தை இரவில் பனியில் வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். எரிச்சல் தணியும். -

மூலத்திற்கு பிரண்டையை நெய்யில் வறுத்தெடுத்து இரண்டு கொட்டைப்பாக்கு அளவு காலை மாலே பசுவின் பாலோடு பருக இரத்த மூலம் தீரும்.

குடல் வேக்காட்டிற்கு மணத்தக்காளி இலைகளைக் கீரைக்கூட்டு செய்வது போல் செய்து சாப்பிடவேண்டும். வயிற்று மந்தம், வயிற்றுவலி முதலியனவும் தீரும். - .

  • ... . கண் எரிச்சலுக்கு

இலந்தைக் கொழுந்தை அரைத்துப் பசும் பாலில் குழப்பித் தலையில் வைத்துக் குளித்துக்கொண்டு வந்தால் கண் எரிச்சல் போய்த் துலக்கமாக இருக்கும்.