பக்கம்:நலம் தரும் நாட்டு மருந்துகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

கண் பார்வைக்கு வெள்ளை மிளகு, நெல்லிவித்து, வேப்பன்வித்து, கஸ்தூரி மஞ்சள், கடுக்காய்த் தோல் ஆகிய இவை களைச் சமமாக எடுத்துத் தூள் செய்து பாலுடன் சேர்த் துக் கொதிக்க வைத்துக் காலையில் குளித்தால் கண் பார்வை உண்டாகும்.

கட்டி வீக்கத்திற்கு விக்கங்கள், ஆருத ரணங்கள், பழுத்து உடையாத கட்டிகள் பலவற்றிற்கும் வேப்பிலையை அரைத்துக் குறிப் பிட்ட இடத்தில் கட்டி வரக் குணமாகும்

வந்தி நிற்க பச்சையாக உள்ள தர்ப்பையைத் தண்ணீர் விட்டுக் கரைத்துக் கலக்கி வடிகட்டிக் குடிக்க வாந்தி நிற்கும்,

தலே சுற்றலுக்கு இஞ்சியைத் தோல் நீக்கி இடித்து ஒரு சேர் எடுத் துக் கொள்ளவேண்டும். இதே யளவுக்கு எலுமிச்சம் பழச் சாறையும், தண்ணீரையும் கலந்து அடுப்பில் ஏற்றி அரை விசை சர்க்கரை போட்டுக் காய்ச்சவேண்டும். பாகு பதத்தில் இறக்கி சர்பத்போல் ஒரு கரண்டி எடுத்து அதில் இரண்டு பங்கு நீர் கலந்து குடிக்கத் தலை சுற்றல்

. விக்கலுக்கு ஒரு தம்ளர் நீரில் ஒரு கரண்டி தேன் கலந்து பருக விக்கல் தீரும்: z