பக்கம்:நலம் தரும் நாட்டு மருந்துகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

மேகத்திற்கு முருங்கைப் பூவைச் சமைத்து உண்ண மேகமானது தீரும். -

பாம்பு கடிக்கு

விஷயத்தியும் சீரகமும் அரைத்த விழுதை உள்ளுக் கேற்றவும். மண்டைக்கு ஏறிய விஷம் நீங்கும்.

வாய்வு நீங்க சுக்கு, மிளகு, திப்பிலி, இந்துப்பு, சீரகம், கறிவேப் பிலைச் சூரணம் வகைக்கு ஒர் பலம் எடுத்து பொரித்த காயத்துடன் பசும் பால் கூட்டிக் கடிகைப் பிரமாணம் அன்னத்தோடு புசிக்க வாய்வு நீங்கும்.

இரத்தக் கடுப்புக்கு ஒரு படி பசுப்பாலில் ஒரு பலம் வெந்தயம் போட்டு வேகவைத்து போதிய அளவு வெல்லமும் நெய்யும் சேர்த்துக் கேசரி போல் கிண்டி காலை மாலை உண்டுவர கோயகலும்.

வாந்தி பேதிக்கு கர்ப்பூரம் ஒரு பங்கு, மிளகு நான்கு பங்கு, கால் பங்கு அபினி சேர்த்து அரைத்து மாத்திரையாகச் செய்து உபயோகிக்க வேண்டும். -

வயிற்று அழற்சிக்கு - வெல்லமும், மிளகுத்துள்ளும் சமமாகக் கலந்து தூள் செய்து சுண்டைக்த்ரத், அளவு சாப்பிட்டால் அழற்சி நீங்கும்.