பக்கம்:நலம் தரும் நாட்டு மருந்துகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

பெற்ற புருடர்களுக்கு 70 முதல் 75-ம், பூரண வளர்ச்சி பெற்ற பெண்களுக்கு 75 முதல் 80-ம், முதுமையில் 75 முதல் 80-ம், உட்கார்ந்த நிலேயில் 67 நாடித் துடிப்பும், நிற்கும் நிலையில் 79-ம், படுத்திருக்கும்போது 40-ம் நாடி நடக்கும்.

நோயாளிகளைப் படுக்க வைத்தும், உட்கார வைத்தும் நாடியைச் சோதிக்கலாம்.

லாகிரிகளை உட்கொண்டபோதும், கித்திரையின்மை, மனநோய், அதிக பலவீனம், இரத்தம் வடியும் காலங் களிலும், அதிக தூரம் நடந்து அயர்ச்சியுற்றபோதும், சூடான உணவுகள் உட்கொண்டபோதும் நாடி தீவிரமாகிப் படபட என்று ஓடும்.

மிதமிஞ்சிய நித்திரையோ, பசியோ, குளிரோ உள்ள காலங்களில் நாடி நடை குறையும். - நாடி பார்க்கும் இடத்தில் கட்டி இருந்தாலும், பூமி வில் கரத்தை ஊன்றிக்கொண்டிருந்தாலும், காலேக் கட்டிக்கொண்டு இருந்தாலும் நாடியின் நடையினைத் தெளி வாகத் தெரிய இயலாது.

இதே மாதிரி க்ஷயரோகி, காசரோகி, சிற்றின்பம் துய்த்தோர், தண்ணிரில் மூழ்கியவர்கள், அதிக வயோதிக கிலையிலுள்ளோர் ஆகியவர்க்கும் உண்மையான நாடி தெரியாது.

நாடி அறிதல்

கைகள், கன்னச் சுழிகள், காற் பெரு விரல்களின் மேல் கணுக்காலின் உட்புறங்கள் ஆகியவற்றில் நாடி சோதிக்கலாம் ; ஆயினும் கை நாடி பார்ப்பதுதான் நல்லது. கை மணிக்கட்டுக்கருகே நாடிப் பெரு நரம்பு ரத்தக்