பக்கம்:நலம் தரும் நாட்டு மருந்துகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

வாய்வு மிகுதி எனக் கொள்க. இருமல் இருக்கும். உடல் தினவு இருக்கும்.

குருநாடி பித்தத்தில் ஆமைபோல் கடந்தால் சுரம் அதிகமாக இருக்கும். வாய்நீர் சுழற்றும். வியர்க்கும்.

சிலேட்டுமத்தில் குருநாடி சிலேட்டுமத்தை ஊடுருவி அமருமாகில் அபாயமாகும்.

குருநாடி குன்றிப்போகுமானல் வயிறு கழியும். கைகால் வீங்கும். கடுப்பெடுக்கும்.

குருநாடி பக்கம் போகாது நேராக கிற்கில் வாதமும், பித்தமும் சேர்ந்து இருக்கும். குருநாடி பின்வாங்கில் அபாயமே.

நாடிகளின் ஓட்டம்

              சந்திரன் - வாதகாடி
              சூரியன் - பித்தநாடி
              சுழிமுனை - சிலேட்டுமநாடி
திங்கள், புதன், வெள்ளி - வாதகாடி ஓடும்
ஞாயிறு, சனி, செவ்வாய் - பித்தநாடி ஓடும்
வியாழன் - சிலேட்டுமநாடி

மேலே சொன்ன நாட்களில் நாடி ஓட்டம் அதிகமாக இருக்கும்.

ஞாயிறன்று வாத ஓட்டம் இருந்தால் இருமல், இரைப்பு இருக்கும். செவ்வாயில் வாத ஓட்டம் இருப்பின் சுரமிருக்கும். சனியில் இவ்விதமிருப்பின் ஜன்னி உண்டாகும். வியாழத்தில் தேகவலியும், திங்களில் பித்தம் அதிகமானல் ஜலதோஷமும் இருக்கும். புதனில்