பக்கம்:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

. அவனுக்குத் தெரியும். உருட்டும் புரட்டும் இல்லாமல், அவன் இருந்து முறையாகத் தொழில் செய்வதானால், எவ்வளவோ செல்வம் தேடியிருக்க முடியும். அதை விட்டுவிட்டு, அவன் எமாற்றுவதையே தொழிலாகக் கொண்டிருந்தான். எவ்வளவு கெட்டிக்காரனாயினும், ஒருவன் சிலரைச் சில காலங்களில் எமாற்ற முடியும்; ஆனால், ஒருவன் எல்லோரையும், எல்லாக் காலங்களிலும் ஏமாற்றிக்கொண்டிருக்க முடியுமா? ஒரு சமயம் பணம் படைத்த முரடன் ஒருவன் அபு கிர்ரிடம் சாயம் தோய்க்கத் துணிகள் கொடுத்திருந்தான். அவனிடம் அபு கிர் 'நாளை நாளை’ என்று வாயிதா போட்டு, பின்னர் அவன் கண்ணிலேயே படாமல், பக்கத்துக் கடையில் மறைந்துகொண்டான். அவனிடம் வாங்கியிருந்த துணிகளை, வாங்கிய அன்றே அவன் எப்பம் போட்டுவிட்டான் ! பணக்காரன், நடந்து நடந்து கால் ஓய்ந்தபின், நகர காஜியாரிடம்: பிராது கொடுத்தான். அவனுக்கு அனுகூலமான தீர்ப்புக் கிடைத்தவுடன், அவன் காவல் அதிகாரிகளுடன் சாயக்கடைக்கு வந்தான். அங்கே சில உடைந்த சட்டி பானைகளைத் தவிர வேறு விலை மதிப்புள்ள பொருள் எதுவுமில்லாததால், அதிகாரிகள் கடையை அடைத்து, முத்திரை வைத்துவிட்டார்கள். அவர்கள் போகுமுன் அண்டையிலிருந்த கடைக்காரர்களிடம், சாயக் கடைக்காரன் அபு கிர் வந்தால், இதோ நிற்கும் கனவானுடைய துணிகளைக் கொண்டுவந்து காவல் நிலையத்திலே கொடுத்துவிட்டு, கடைச்சாவியை வாங்கிக்கொள்ளும்படி சொல்லுங்கள்!” என்று தெரிவித்தார்கள். சிறிது நேரத்திற்குப் பின் அபு கிர் சவரக் கடைக்கு வந்ததும், அபு ஸிர் அவனிடம், அந்தக் கனவானுடைய துணிகள் என்ன ஆயின? என்று கேட்டான். 'அவை களவு போய்விட்டன!’ வருடக்கணக்காக உன் கடையில் துணிகள் எல்லாம் களவு போனதாகவே இதுவரை சொல்லி வந்திருக்கிருக்கிறாய். அப்படியானால் நகரிலுள்ள திருடர்கள், வம்பர்கள் எல்லோருமே உன்கடையை வைத்துத்தான்பிழைக்கிறார்கள்போலிருக்கிறது! காஜி- நீதிபதி.