பக்கம்:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை


மருத்துவனும் அவன் சொல்லில் உண்மையிருந்ததை உணர்ந்துகொண்டான். இருவரும் விரைவிலே கிளம்புவதற்கு ஏற்பாடு செய்யவேண்டுமென்று தீர்மானித்தனர். அப்பொழுது அபு கிர் கூறியதாவது: "நண்பா, நாம் இருவரும் சகோதரர் களாகிவிட்டோம். நமக்குள் எவ்விதவேற்றுமையும் கிடையாது. இது முதல் நாம் ஓர் உடன்பாடு செய்துகொள்வோம். நம்மில் எவன் ஒருவனுக்குவேலை கிடைத்தாலும், அவன்வேலை கிடைக்காத மற்றவனுக்கு உணவளித்து வர வேண்டும் : இருவர் செலவும் போக மிஞ்சியதை ஒரு பெட்டியிலே போட்டுப் பொதுவில் சேமித்து வைத்திருப்போம். அலெக்சாந்திரியாவுக்குத் திரும்பி வந்த பிறகு, அந்தச் சேமிப்பை ஆளுக்குப் பாதியாகப் பிரித்து எடுத்துக்கொள்வோம்!" "அவ்வாறே செய்வோம்!” என்று அபு ஸிர் சம்மதித்தான். இருவரும் இந்த உடன்பாட்டை உறுதி செய்துகொள்வதற்காகத் திருக்குர் ஆன் வேதத்திலுள்ள முதலாவது சூறாவை ஓதினார்கள். அபு ஸிர் தன் கடையைப் பூட்டி, திறவுகோலைக் கடையின் சொந்தக்காரரிடம் ஒப்படைத்தான். இருவரும் தங்களுக்கு வேண்டிய சாமான்களை மூட்டைகளாகக் கட்டிக்கொண்டு, மறுநாளே ஒரு கப்பலில் ஏறி வெளிநாட்டிற்குப் பிரயாணமானார்கள்.