பக்கம்:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8


 அபு ஸிர் தன் கத்திகளையும் கிண்ணியையும் எடுத்துக் கொண்டு பிரயாணிகளிடையே சென்றான். அவன் தோளில் கந்தலான ஒரு துண்டும் இருந்தது. பிரயாணிகளில் ஒருவன் அவனைக் கண்டதும், அவனை அழைத்துத் தனக்குச் சவரம் செய்யும்படி வேண்டிக்கொண்டான். மருத்துவனும் அவ்வாறே செய்துவிட்டுக் கிளம்பும் பொழுதும், பிரயாணி அவனுக்கு அரை திர்ஹம்" அளித்தான். அவன், காசுக்குப் பதிலாகக் கொஞ்சம் ரொட்டி கிடைத்தால் நலம். என்னுடன் ஒரு நண்பனும் வந்திருக்கிறான். எங்களிடம் போதிய உணவுப் பண்டங்கள் இல்லை !’ என்று சொன்னான். பிரயாணி அவனுக்கு ஒரு துண்டு ரொட்டியும், கொஞ்சம் பாலாடையும், குடிதண்ணிரும் கொடுத்தான். அவன் அவைகளைத் தன் நண்பனிடம் கொண்டுபோய்க் கொடுத்து, இந்தா!. எழுந்திருந்து, இவைகளை உண்டு பசியாறு ! கப்பலில் நல்ல தண்ணிர் கிடைப்பது அரிது. இதோ தண்ணீரும் இருக்கிறது !’ என்று சொன்னான். உடனே சாயக்காரன் எழுந்திருந்து சாப்பிடத் தொடங்கினான். மருத்துவன் மறுபடி தன் பெட்டியைத் தூக்கிக்கொண்டு கப்பலின் மேல் தளத்திலுள்ளவர்களைப் பார்க்கச் சென்றான்.
 அங்கே அவன் வேறு சிலருக்கும் சவரம் செய்ததில், ரொட்டிகளும் பாலாடைகளும் கிடைத்தன. சிலர் உணவுப் பொருள்களுடன், பணமும் கொடுத்தனர். அன்று மாலைவரை அவனுக்கு வேலை சரியாயிருந்தது. மாலையில் அவனிடம் முப்பது ரொட்டித் துண்டுகளும், முப்பது வெள்ளிக் காசுகளும், கொஞ்சம் பழங்களும், வெள்ளரிக் காய்களும், பாலாடைகளும் சேர்ந்திருந்தன. அவன் எது கேட்டாலும், பிரயாணிகள் அவனுக்கு அளிக்கச் சித்தமாயிருந்தனர். மேலும், அவன் அன்றே கப்பலின் தலைவரான கப்பித்தானுக்கும்* சவரம் செய்தான். அப்பொழுது கப்பித்தான், அவன் நிலைமையை விசாரித்துத் தெரிந்துகொண்டு, ஒவ்வொரு நாளும் இரவில் நீர் உமது நண்பரையும் அழைத்து வந்து என்னுடன் சாப்பிட வேண்டும் . எத்தனை நாட்கள் என்னுடன் நீங்கள் பிரயாணம் செய்கிறீர்
  • திர்ஹம் - ஒரு தங்க நாணயம்.
  • கப்பித்தான் - கேப்டன்' என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழ் உருவம்.