பக்கம்:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

14

ஸிர் விரும்பமாட்டான். அம்மட்டோடு அவனை விட்டு விடுவான். ஆனால், இவ்வாறு சில வாரங்கள் கழிந்த பின்பு, நாற்பத் தோராவது நாளில், மருத்துவனுக்கே நோய் வந்துவிட்டது. அவனும் படுத்துவிட்டான். அவனால் எழுந்து வெளியே சென்று வர இயலவில்லை. அப்பொழுது விடுதியிலிருந்த ஒரு காவற்காரன் அவர்களுக்கு உதவி செய்து வந்தான். நான்கு நாட்கள் அவனே வெளியே சென்று, அவர்களுக்கு வேண்டிய உணவு முதலியவற்றை வாங்கிக் கொடுத்துவந்தான். அபு கிர் அப்பொழுதும் படுத்துக் கிடந்தான் : உணவு வந்தவுடன் உண்டு விட்டு, அவன் மீண்டும் பாய்மேல் படுத்துவிடுவான். பக்கத்திலே நண்பன் நோயுற்றுக் கிடக்கும் பொழுது, அவனுக்கு எவ்வித உதவியும் செய்வதில்லை. ஐந்தாவது நாளில் அபு ஸிர்ரின் நோய் அதிகமாகிவிட்டது. அவன் தன்னினைவு இழந்து, பேச்சில்லாமல், மூடிய கண்களைத் திறவாமல் படுத்திருந்தான்.

அபு கிர் பசி தாங்காமல் எழுந்திருந்து நண்பனுடைய தலைமாட்டில் கிடந்த துணியை உதறிப் பார்த்தான். அதில்







|

聶 o ■ s