பக்கம்:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

<b4.அபுகிர்ரின்அதிருஷ்டம்b/>

புத்தம் புதிய உடைகள் அணிந்து, அபு கிர் குதிரைமீது சவாரி செய்துகொண்டு நகருக்குள்ளே செல்லும் பொழுது, பெரிய அமீரைப் போல விளங்கினான். கொற்றர்களும் சிற்பிகளும் அவனைத் தொடர்ந்து சென்றனர். நகரின் பல பகுதிகளைச் சுற்றிப் பார்த்து, அவன் முடிவாக ஒரிடத்தைத் தேர்ந்தெடுத்தான். அங்கேயிருந்த வீட்டில் குடியிருந்தவருக்கு அரசர் ஏராளமான நிதி அளித்து, அதை விலைக்கு வாங்கினார். பின்னர் கொற்றர்கள் வேலை செய்யத் தொடங்கினர். சாயக்காரன் அருகில் இருந்துகொண்டு, இப்படிக் கட்டுங்கள், அப்படிக் கட்டுங்கள் !’ என்று ஆலோசனை சொல்லிக்கொண் டிருந்தான். வேலை மும்முரமாக, நடந்ததால் புதிய கட்டடம் மேலெழுந்துவிட்டது. பற்பல கொற்றர்கள் கூடி அதை விரைவிலேயே கட்டி முடித்தார்கள்.
 கட்டடம் கட்டி முடிந்த செய்தியை அபு கிர் அரசரிடம் போய்த் தெரிவித்து, மேற்கொண்டு சாயப் பொருள்கள்-