பக்கம்:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

25

-வந்தேன். இப்போது அவன் நல்ல நிலைமையில் இருப்பதால் என்னை மிகவும் ஆதரிப்பான் என்பது நிச்சயம்!' இவ்வாறு சிந்தனை செய்துகொண்டே, அவன் தொழிற்சாலை வாயிலை நோக்கிச் சென்று, உள்ளே எட்டிப் பார்த்தான். அங்கே அபு கிர் ஒரு கட்டிலில் விரிக்கப்பெற்றிருந்த மெத்தையின்மீது அமர்ந்திருப்பதை அவன் கண்டான். அரசர்கள் அணியக்கூடிய மதிப்புயர்ந்த ஆடைகள் அணிந்திருந்த அபு கிர்ரின் அருகில், நான்கு கறுப்பு அடிமைகளும், நான்கு வெள்ளை ஏவலர்களும் நின்றுகொண்டிருந்தனர். உள்ளே பத்து நீகிரோ அடிமைகள் துணிகளைச் சாயத்தில் முக்கிக்கொண்டிருந்தனர். அபு கிர் தன் கைகளில் அழுக்குப் படாமல், "இதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள் !" என்று அதிகாரம் மட்டும் செய்து கொண்டு, ஓர் அரசரைப் போல அமர்ந்திருந்தான். அந்த நிலையில், மருத்துவன் மெல்ல உள்ளே சென்று, அவனுக்கு எதிரில் சிறிது தூரத்தில் நின்றுகொண்டிருந்தான் : அவ்ன் தன்னைக்கண்டதும் வணக்கம் கூறி வரவேற்று,பரிவும் பாசமும் கொண்டு, தன்னுடன் அளவளாவிப் பழகுவான் என்று அந்த-