பக்கம்:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26


ஏழை மருத்துவன் மனப்பால் குடித்துக்கொண்டிருந்தான். அபு கிர்ரின் பார்வை அவன்மீது விழுந்தது. உடனே அவன் கூப்பாடு போடத் தொடங்கினான். அடே, போக்கிரி ! தொழிற்சாலையின் வாசல் பக்கம் நிற்காதே, நிற்காதே என்று உனக்கு நான் எத்தனை தடவை சொல்லியாயிற்று ? நீயோ திருடன் ! இங்கே வந்து என்னை இந்த ஜனங்கள் முன்பு இழிவு செய்ய வேண்டும் என்றா விரும்புகிறாய்?" இப்படிச் சொல்லிக்கொண்டே, அவன் அடிமைகளை நோக்கி, 'இவனைப் பிடியுங்கள் !’ என்றான்.

  கறுப்பு அடிமைகள் உடனே அவனைப் பிடித்துக்கொண்

டார்கள். அபு கிர் ஆசனத்தை விட்டு எழுந்து சென்று, 'அவனைக் கீழே தள்ளுங்கள் !’ என்று பணித்தான். மறு கணத்தில் அபு ஸிர் தரைமீது தள்ளப்பட்டான். சாயக்காரன் ஒரு கழியை எடுத்துக்கொண்டு, அவன் முதுகில் பளீர் பளீர் என்று அடிக்கத் தொடங்கினான். அவன் கை சலிக்கும் வரை அடித்துவிட்டு, கீழே கிடந்தவனைப் புரட்டிப் போடச் சொல்லி, அவன் வயிற்றிலும் நெஞ்சிலும் மீண்டும் அடித்து நொறுக்கினான். அதற்குப்பின், அவன் தரையிலே கிடந்தவனைப் பார்த்து, 'அட படுக்காளிப் பயலே துரோகி ! இனிமேல் இந்தத் தொழிற்சாலைப் பக்கம் நீ தலையைக் காட்டினால், உன்னை உடனே அரசரிடம் அனுப்பிவிடுவேன். அப்புறம் உன் கதி அதோ கதிதான் ! நகரக் காவலர்கள் உன் தலையை வாங்கிவிடுவார்கள் ! ஒடிப்போய்விடு !’ என்றும் கொக்கரித்தான்.

  இவ்வாறு அபு ஸிர், மானம் அழிந்து, உடலெல்லாம் வலி தாங்காமல், அந்த இடத்தைவிட்டு வெளியேறினான். அங்கே இருந்தவர்களில் சிலர் அபு கிர்ரிடம், 'இந்த மனிதன் என்ன செய்தான் ?’ என்று கேட்டனர். அதற்கு அவன் கூறியதாவது: "இந்தப் பயல் ஒரு திருடன் ஜனங்களுடைய துணிகளைத் திருடுவதே இவன் வேலை. என்னிடமிருந்து எத்தனை தடவை இவன் துணிகளைக் களவாடிச் சென்றான், தெரியுமா ? அப் பொழுதெல்லாம், 'இவன் ஏழை, ஆண்டவனே, இவனை மன்னித்துவிடு !’ என்று நான் சொல்லுவது வழக்கம். இது-