பக்கம்:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

<5b•<bஅபுஸிர்கட்டியஹம்மாம் b/>

அபு ஸிர் தன் நண்பனிடம்

பெற்ற மரியாதையை எண்ணிக்கொண்டு, துயரத்தோடு தன் விடுதிக்குத் திரும்பினான். அங்கே தன் உடலின் எரிவு தீரும்வரை உட்கார்ந்துகொண்டு, அவன் நண்பன் இழைத்த கொடுமைகளையும், கூறிய வசைகளையும் பற்றிச் சிந்தனை செய்தான். அடியினால் ஏற்பட்ட காந்தல் சற்றே குறைந்தபின், அவன் எழுந்திருந்து, சந்தைப் பக்கமாக நடந்து சென்றான். அங்கே வழியில் ஒருவனைக் கண்டு, 'ஹம்மாம். எங்கே இருக்கிறது?"என்று விசாரித்தான். அவன் 'அது என்னது?’ என்று கேட்டான். அபு ஸிர் அது குளிக்கும் அறை என்று சொன்னதன் பேரில், அவன், 'இந்த நகரில் ஹம்மாம் என்பதே கிடையாது! நேரே கடலுக்குப்-

           _____
ஹம்மாம் - குளிக்கும் அறைகள் உள்ள இடம். அங்கே குளிர்ந்த நீரும், வெந்நீரும், தேய்த்துக் குளிப்பதற்கு வேண்டிய தைலம், சோப்பு முதலியவைகளும் இருக்கும்.