பக்கம்:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34


குளிப்பதற்கு ஆயிரம் தினார்கள் கொடுப்பதற்கு மனம் வராது: இந்த நிலையில் ஏழைகள் எப்படி அவ்வளவு தொகை கொடுக்க முடியும் ?’ என்றும் அவர்கள் கூறினார்கள்.

அரசர் அவர்களைப் பார்த்து, 'செல்வச் சீமான்களே ! இந்தத் தடவை நீங்கள் ஒவ்வொருவரும் நூறு தினார்களையும், ஒரு வெள்ளை அடிமை, ஒரு கறுப்பு அடிமை, ஓர் அடிமைப்பெண் ஆகியவர்களையும் கொடுங்கள் !’ என்று சொன்னார். அவர் கள், அவ்விதமே செய்கிறோம்; ஆனால், பின்னால் அவரவர், சக்திக்குத் தகுந்ததைக் கொடுத்து வருகிறோம் !’ என்று ஒப்புக்கொண்டனர்.
மன்னருடைய கஜானாவிலிருந்து அபு ஸிர்ருக்கு ஆயிரம் பொற்காசுகளுடன் மூன்று அடிமைகளும் வந்து சேர்ந்தனர். அன்று அவருடன் வந்து ஸ்நானம் செய்ய நானூறு பிரபுக்களும், தலைக்கு நூறு தினார் வீதம் நாற்பதாயிரம் தினார்களை அவனுக்கு அனுப்பினார்கள்: அரசர் கூறியபடியே அவர்கள் அனுப்ப வேண்டிய ஆயிரத்து இருநூறு அடிமைகளும் வந்து சேர்ந்தனர். அரசர் விசேடச் சம்மானமாக அபு ஸிர்ரிடம் பதினாயிரம் தினார்களைத் தனியாக அளித்தார். மேலும், முப்பது அடிமைகளையும் அவனிடம் வேலை செய்யும்படி அனுப்பினார்.
அபு ஸிர் அங்கே வந்து நின்ற அடிமைகளை ஒரு முறை பார்த்துவிட்டு, அரசரிடம் நெருங்கி, வேந்தர் திலகமே ! தங்களை அண்டிய அடியேனுக்கு வற்றாத செல்வத்தை வழங்க வேண்டும் என்று கருதி, அள்ளி அள்ளிக் கொடுத்திருக்கிறீர்கள்! ஆனால் எண்ணில் அடங்காத அடிமைகளையும் அத்துடன் அளித்துவிட்டீர்கள்! இத்தனை பேர்களும் தங்கியிருப்பதற்குக் கூட என்னிடம் இடமில்லையே! இவர்களை நான் என்ன செய்ய? இவர்களை நானே வைத்துக்கொண்டு காப்பதானால், என் செல்வம் எல்லாம் சில நாட்களிலே கரைந்துவிடும்!” என்று விண்ணப்பித்துக்கொண்டான்.
 உடனே அரசர் அடிமைகள் அனைவரையும் அனுப்பி வைக்கும்படி சொன்னார். “ஓர் அடிமைக்கு நூறு தினார் வீதம் அவர்களுக்கு உரிய விலையை உனக்கு அனுப்பச் சொல்லு