பக்கம்:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38


அவன் ஹம்மாமின் வாயிலுக்குச் சென்றதும், உள்ளேயிருந்து அகில், சந்தனம் முதலிய கட்டைகளின் நறும்புகை வந்து அவன் மூக்கைத் துளைத்தது. அவன் உள்ளே சென்றதும், பெஞ்சிகளில் கூட்டம் கூட்டமாகப் பல திறப்பட்ட மக்கள் அமர்ந்திருப்பதைக் கண்டான். அவர்களைத் தாண்டி அவன் சிறிது தூரம் சென்றதும், ஒரு மேசையடியில் அபு ஸிர் வீற்றிருப்பதைப் பார்த்தான். அவனும் இவனைக் கண்டு கொண்டான். உடனே அபு ஸிர் எழுந்து மகிழ்ச்சியோடு அவனை வரவேற்க ஓடிவந்தான். அதற்குள் அபு கிர் அவனைப் பார்த்து, 'இதுதான் நண்பனுக்குஅழகோ ? இதே ஊரில் நான் ஒரு சாயத் தொழிற்சாலை திறந்து நடத்தி வருகிறேன். அரசர் முதல் பலரும் அதை ஆதரித்து வருகின்றனர். இப்பொழுது நான் நல்ல நிலைமையில் செல்வமும் சிறப்பும் பெற்று விளங்குகிறேன். இவ்வளவு காலமாக நீ வந்து, என்ன நண்பா. சுகமா ?’ என்றுகூடக் கேட்கவில்லையே! உன்னைத் தேடி என் வேலையாட்களைப் பல முறை அனுப்பினேன். அவர்கள் நகரிலுள்ள விடுதிகளை யெல்லாம் சுற்றிப் பார்த்தும், உன்னைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நீ எங்கே சென்றாய் என்றுகூடத் தகவல் சொல்லுவார் இல்லை!’ என்று சொன்னான்.

அபு ஸிர், நான் உன்னை ஒரு முறை வந்து பார்க்க வில்லையா? என்னைத் திருடன் என்றும், போக்கிரி என்றும் ஏசி, நீ அடித்து விரட்டவில்லையா? மக்களின் முன்பு நீ என்னை மானபங்கப்படுத்தியதும் மறந்து போய்விட்டதா?” என்றான்.

என்னஇப்படிப் பிதற்றுகிறாய் நீ ? நான் உன்னையா அடித்தேன் ?” "ஆம், என்னைத்தான்!" உடனே அபு கிர் அவனை அடையாளம் தெரியாததால் அப்படி நடந்துவிட்டதாக ஆயிரம் தடவை சத்தியம் செய்தான். "உன்னைப் போலவே ஒரு பயல் இருக்கிறான். அவன் அடிக்கடி தொழிற்சாலைக்கு வந்து துணிகளைத் திருடிக் கொண்டு போவது வழக்கம். உன்னை அவன்தான் என்று