பக்கம்:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

<b7•>.<bசாயக்காரரின் சாயம் வெளுத்ததுb/>

அரண்மனைக்கு எதிரே ஒரு சிறு தீவு இருந்தது. மாலுமியின் தலைவர் அபு ஸிர்ரை அங்கே அழைத்துச் சென்றார். அங்கே கரை சேர்ந்த பின்புதான், அவர் அவனிடம் பேசத் தொடங்கினார். “எனக்கு முன்பு ஒரு நாள் ஹம்மாமில் நீர் செய்த உபசாரங்கள் எல்லாம் என் நினைவிலிருக்கின்றன. உம்மைப்பற்றி இத்தனை நாளும் மகிழ்ச்சியோடு எண்ணிக் கொண்டிருந்தேன். உமக்கு இந்தக் கதி எப்படி ஏற்பட்டது ? மன்னருக்கும் உமக்கும் இடையிலே என்ன நடந்தது ? நீர் என்ன கொடுமையான காரியத்தைச் செய்ததில், அரசருக்கு இவ்வளவு கோபம் வத்துவிட்டது ?’ என்று பல கேள்விகள் கேட்டார்.
 அபு ஸிர், 'நான் ஒன்றுமே செய்யவில்லை, இத்தகைய தண்டனைக்குரிய குற்றம் எதையும் நான் செய்ததில்லை ! நான் நிரபராதி !’ என்று சொன்னான்.