பக்கம்:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அந்த நேரத்தில் மீன் வாங்கிப் போவதற்காக அரண்மனையிலிருந்து இரண்டு இளைஞர்கள் அவனிடம் வந்து,“கப்பித்தான் எங்கே? என்று கேட்டனர். அவன் தனக்குத் தெரியாதென்று சொல்லி, அவர்கள் முன்பு தன் வலக்கையை நீட்டிப் பேசினான். அவனுடைய விரலிலிருந்த மோதிரத்தின் ஒளி பட்டு, இளைஞர் இருவரும் மடிந்து கீழே விழுந்துவிட்டனர். அந்த விபரீதத்தைக் கண்டு, அபு ஸிர் மிகவும் துக்கமடைந்து தவித்துக்கொண்டிருந்த வேளையில், கப்பித்தானும் வந்து சேர்ந்தார்.

  அவர் தூரத்தில்வரும்பொழுதே அவனுடைய கையில் மின்னிக்கொண்டிருந்த மோதிரத்தைக் கவனித்துவிட்டார், அவனுக்கு எதிரில் இளைஞர்கள் இறந்து கிடந்ததையும் கண்டு, அவர் அந்த மோதிரம் அரசருடைய மந்திர மோதிரமே என்பதைத் தெரிந்துகொண்டார். அவர் அபு ஸிர்ரின் அருகில் வரும்பொழுது, மோதிரத்தைத் தமக்கு எதிரில் நீட்டாமல் மறைத்து வைத்துக்கொள்ளும்படி கூறினார்.