பக்கம்:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

புகுந்தது போல், அவர் கவலை நீங்கி, ஊக்கமும் உற்சாகமும் பெற்று விளங்கினார். பிறகு அவர் தம் இருக்கை விட்டு எழுந்து, 'மருத்துவனைத் தம் மார்போடு சேர்த்து அனைத்துக்கொண்டு, "நீ மேன்மக்கள் எல்லோரிலும் மேலானவன். உனக்கு நான் செய்த தவறுக்காக நீ என்னை மன்னிக்கவேண்டும்! உன்னைத் தவிர வேறு எவன் கையில் இந்த மோதிரம் சிக்கியிருந்தாலும், அவன் ஒருகாலும் இதை என்னிடம் கொடுத்திருக்க மாட்டான் !" என்று அவனை மனமாரப் பாராட்டினார். அப்பொழுது அபு சிர், “அரசர் பெருமானே! நான் தங்களை மன்னிக்க வேண்டும் என்று சொல்லுகிறீர்களே! என்னைக் கொன்றுவிடும்படி தாங்கள் உத்தரவிடும் அளவுக்கு நான் செய்த குற்றம் என்ன என்பதைத் தயவு செய்து சொல்லுங்கள்!” என்று கேட்டான். அரசர், இப்போது நீ செய்த செயலிலிருந்து, நீ எப்பொழுதுமே எவ்விதக் குற்றமும் செய்ததில்லை என்பதையும், நீ நிரபராதி என்பதையும் நான் உணர்ந்துகொண்டேன். அந்தச் சாயக்காரன் என்னிடம் ஓடி- .