பக்கம்:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50


வந்து சொன்ன அபாண்டங்களால் இவ்வளவும் விளைந்து விட்டன!” என்று கூறி, அபு கிர் தம்மிடம் கூறிய வசனங்களையும், தாம் ஹம்மாமில் தைலத்தைக் கண்டதும் அடைந்த சந்தேகத்தையும் விவரித்தார்.

 அபு ஸிர் தான் விளக்க வேண்டிய விஷயங்களைக் குறிப்பாக எடுத்துக் கூறினான். அரசருக்குச் சந்தேகத்தை உண்டாக்கிய தைலத்தைத் தயாரித்து வைக்கும்படி தனக்குக் கூறியது அபு கிர்தான் என்று அவன் குறிப்பிட்டான். தன்னைத் தைலம் தயாரிக்கும்படி சொல்லிவிட்டு, அரசரிடம் உடனே போய்த் தைலம் ஆபத்தானது என்று சொல்லி, சாமர்த்தியமாக அபு கிர் செய்த வஞ்சனையை அவன் அம்பலப்படுத்தினான். மேலும், அந்தத் தைலத்தால் உடலுக்குக் கேடு ஒன்றும் விளையாது என்றும், தன் நாட்டில் அதே போல் தயாரித்து மக்கள் உபயோகிப்பது வழக்கம் என்றும் அவன் எடுத்துக் காட்டினான். பின்பு, அவனும் அபு கிர்ரும் அலெக்சாந்திரியாவி லிருந்து புறப்பட்டு, பிழைப்புத் தேடி அந்த நகரத்திற்கு வந்ததையும், தொடக்கத்தில் தாங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்வதற்காகச் செய்துகொண்ட ஒப்பந்தத்தை யும், கப்பலிலும் நகரிலும் தான் அவனுக்குச் செய்த உதவி களையும், தான் விடுதியில் நோயுற்று நினைவேயில்லாமல் கிடந்த சமயத்தில் அவன் தன் பணத்தைத் திருடிக்கொண்டு. ஒடியதையும், பின்னால் சாயத் தொழிற்சாலையில் அவன் தன்னை அநியாயமாக அடித்து விரட்டியதையும் அவன் விவரித்தான். தான் ஒரு கிறிஸ்தவ மன்னரின் கையாள் என்று அபு கிர் மன்னரிடம் சொன்னது பச்சைப் பொய் என்றும்,தன் நாட்டைத் தவிர, தனக்கு வேறு நாடே தெரியாது என்றும் சுட்டிக் காட்டினான்.
  மன்னர், அபு ஸிர் முன்பு தங்கியிருந்த விடுதியின் வேலைக்காரனையும், அபு கிர்ரின் சாயத் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த ஊழியர்களையும் அழைத்துவரச் சொல்லி, அவர்களையெல்லாம் ஐயம் தீர விசாரித்தார். விடுதியில் அபு கிர் ஒருவருக்கும் தெரியாமல் பணத்தைச் சுருட்டிக்கொண்டு ஒடியதையும், தானே தன் செலவில் அபு-