பக்கம்:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

51

ஸிர்ரைப் பல நாள் காப்பாற்றி வந்ததையும் வேலைக்காரன் நிரூபித்தான். தொழிற்சாலையில் அபு ஸிர்ரைக் கண்டதும் அபு கிர் அவனை ஏசி, அவனைப் பிடித்துக் கீழே தள்ளச் சொல்லித் தன் கழியால் முதுகிலும், மார்பிலும், வயிற்றிலும் கொடுமையாக அடித்ததற்குத் தொழிற்சாலை ஊழியர்கள் சாட்சியம் கூறினார்கள். பிறகு, மன்னர் அபு கிர்ரை அழைத்து வரும்படி காவலர் களை ஏவி, கால்களில் பாதரட்சையில்லாமல், தலையில் தலைப்பாகை இல்லாமல், இரண்டு கைகளையும் முதுகுப் புறத்தில் சேர்த்துக் கட்டி அவனை இங்கே இழுத்து வாருங்கள் !’ என்று சொன்னார். காவலர்கள் அவன் வீட்டிற்குச் சென்ற சமயம், அவன் ஓர் ஆசனத்தில் சாய்ந்துகொண்டு, அபு ஸிர் மடிந்துவிட்டான் என்று எண்ணி மகிழ்ந்துகொண் டிருந்தான். அப்பொழுது திடீரென்று அவர்கள் பாய்ந்து, அவனைக் கட்டி இழுத்துக்கொண்டு சென்றனர். அவன் திவானுக்குள் கொண்டுவரப்பட்டதும் அரசரின் அரியணைப் பக்கம், ஓர் ஆசனத்தில் அபு ஸிர்ரும் அமர்ந்திருப்பதை அவன் கண்டான்.