பக்கம்:நல்ல எறும்பு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சொறிந்து கொண்டே தூங்க ஆரம்பித்தான். பாவம்  ! அந்த எறும்பு வேறு என்ன செய்யும் ? அது சிறிது நேரம் அசைவற்று இருந்தது ; பிறகு, ஏதேதோ எண்ணிக் கொண்டு அவன் அருகே போவதும் வருவதுமாய் இருந்தது. முடிவில் அது அச்சிறுவனுக்குப் பின்புறமாகச் சுவரின்மீது வேகமாக ஏறி, அவன் முதுகில் மெதுவாக வந்து, சிறிது நேரம் யோசித்தது. பிறகு அவ்வெறும்பு, வளைபோல் ஆழமாக இருந்த அவன் காதிற்குள் விரைந்து சென்று குடைய ஆரம்பித்தது.

அவ்வெறும்பு காதில் நுழைந்தவுடனே அவனுக்குத் தூக்கம் பறந்து போயிற்று. அவன், ‘ஆ  ! ஊ  !’ என்று உறுமிக் கொண்டு கண்ணைப் பிசைந்தான் ; “ஒ ! என்னவோ காதில் குடைகிறதே - குடைகிறதே !” என்று கத்திக்கொண்டு காதில் விரல் விட்டுத் துழாவினான் ; தன் இடத்தை விட்டு அங்கும் இங்கும் ஒடினான்.

14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_எறும்பு.pdf/18&oldid=1525791" இலிருந்து மீள்விக்கப்பட்டது