பக்கம்:நல்ல எறும்பு.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அது வீட்டுக்குச் சென்றதும் அச் சரமான விட்டுக் கீழே இறங்கித் தன் இடத்தை அடைந்தது. அதற்கு நண்பர் பலர் உண்டு. அவைகளும் எறும்புகளே. அவைகளிடம் அது, அன்று செய்த வேலை களை யெல்லாம் சொல்லி மகிழ்ந்தது. அதைக் கேட்டு அவைகளும் மகிழ்ச்சி அடைந்தன. பிறகு அவைகளில் ஓர் எறும்பு, கெட்ட பிள்ளைகளை நாமும் கடிக்க வேண்டும்." என்றது. அதற்கு எல்லா எறும்புகளும், ஆம் ! ஆம் ! ' என்று, தலையை அசைத்தன. ஆசிரியர் சொல் வதைக் கேட்காத பிள்ளைகளையும், தாய் தந்தையர்களுக்கு அடங்காத பிள்ளைகளை யும், அன்று முதல் எல்லா எறும்புகளும் கடிக்க ஆரம்பித்தன. 占一2 25