பக்கம்:நல்ல எறும்பு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாராயணன்

நாராயணன் ஒருவர் சொல்லையும் கேட்க மாட்டான். அவன் மிகவும் பிடிவாதக்காரன். “தூணைச் சுற்றாதே !” என்பாள் அவன் தாய். “சுற்றினால் உனக்கென்ன ?” என்பான் நாராயணன். “அப்பா, மயக்கம் வரும்,” என்பாள் அவன் தாய். “வந்தால் வரட்டும் !” என்று அத்தூணைச் சுற்றிக் கொண்டே இருப்பான் நாராயணன்.

அவன், தன் தந்தையின் சொல்லையும் சிறிதும் கேட்கவே மாட்டான். அதனால் அவன் தந்தை மிகவும் கோபம் கொள்ளுவார் அவனைப் பிரம்பினாலும் அடிப்பார். அவர் என்ன செய்தும் அவன் பிடிவாதக்காரனாகவே இருந்தான்,

நாராயணன் ஒரு நாள் கோபித்துக் கொண்டு, ‘நான் சாப்பிடமாட்டேன்’ என்றான். அப்போது அவன் தாய் அவனை

27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_எறும்பு.pdf/33&oldid=1525806" இலிருந்து மீள்விக்கப்பட்டது