பக்கம்:நல்ல கதைகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


போல எல்லா மாணவர்களும் ஏககாலத்தில் வாய்விட்டுச் சிரித்தனர்.

‘வெளியே வா! உன்னைப் பேசிக்கிறேன்’ என்பது போல, மாணிக்கத்தை வெறித்துப் பார்த்தான் கண்ணன்.

ஆசிரியர் அதட்டும் குரலைக் கேட்டு வகுப்பறை அமைதியானது.

'தேர்வில்தான் தேறவில்லை, மதிப்பெண்களோ மிகவும் குறைவு. சுறுசுறுப்பாக உட்கார்ந்து நான் சொல்வதையாவது கேட்கக் கூடாதா? படிக்க வந்தவனுக்கு பகற் கனவு எதற்கு?’

மடித்துக் கிடந்த புத்தகத்தை எடுத்து விரித்து வைத்து ஆசிரியர் பேசத் தொடங்கினார்.

“மாணவர்களே! தண்டில் வளையாதது தடியில் வளையுமா? என்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/11&oldid=1081092" இலிருந்து மீள்விக்கப்பட்டது