பக்கம்:நல்ல கதைகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நல்ல கதைகள்

10


போல, ஐந்து வயதில் கற்பதற்கு விரும்பாத மனம், இருபத்தி ஐந்து வயதில் என்ன செய்யும்?"

போனகாலம் திரும்பி வராது! இந்தக் காலம் தான் உங்களுக்கு கவலையே இல்லாத காலம், வீட்டுப் பிரச்சினையோ, வெளி விவகாரங்களோ வராத காலம்.

கற்க வேண்டியதைக் கற்று, நிற்க வேண்டிய நியாய, நீதியான வழியில் நின்று, வாழ வேண்டிய புகழ் மிகுந்த வாழ்க்கையை வாழ்ந்தால்தான், உங்களுக்கும் பெருமை. உங்களைப் பெற்றெடுத்துப் பெரும் சிரமத்துடன் காக்கின்ற உங்கள் அன்பு பெற்றோர்களுக்கும் பெருமை."

வகுப்பு முடிந்ததற்கான மணி நீண்டு ஒலித்து ஓய்ந்தது. ஆசிரியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/12&oldid=1081093" இலிருந்து மீள்விக்கப்பட்டது