பக்கம்:நல்ல கதைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நல்ல கதைகள்

14


கண்ணா!... கவலையில் மெல்லிய குரலில் தாயின் அழைப்பு.

ம்...! கண்ணனின் திமிரான குரலின் பிரிதி பலிப்பு.

பெருங்காய டப்பாவிலே போட்டிருந்த 5 ரூபாயைக் காணவில்லை, எடுத்தாயா நீ?

நான் ஏன் எடுக்கிறேன்? நீ பணம் எங்கே வைக்கிறாய் என்று எனக்கு எப்படி தெரியும் ? வேறு வேலை இல்லையா உனக்கு?

வைப்பது என் வேலை. திருடிக் கொள்வது உன் வேலை. எனக்குத் தெரியும் எங்கே அந்த பணம்?

“என்னம்மா கேலி செய்கிறாயா? கண்ட இடத்தில் பணத்தைப் போட்டு விட்டு, கடைசியில் என்னையே கள்ளன்னு சொல்றே" என்று ஆங்காரத்துடன் பதில் சொன்னான் கண்ணன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/16&oldid=1081110" இலிருந்து மீள்விக்கப்பட்டது