பக்கம்:நல்ல கதைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நல்ல கதைகள்

16


அரிசி வாங்கினாலும் சரி, நீ அரண்மனையையே வாங்கினாலும் சரி, எனக்கென்ன? நான் அந்த பணத்தை எடுக்கவே இல்லை.

அப்போ, நீ எடுக்கவே இல்லையா?

எடுக்கலே!, சத்தியமா எடுக்கலே!, சத்தியமா எடுக்கலே!, என் ஆணையா எடுக்கலே!, உன் ஆணையா எடுக்கலே!

தாயின் தலைமீது திடீரென்று அடித்து சத்தியம் செய்தான் கண்ணன்.

அடிப்பட்ட வேகம் தாங்காமல், அப்படியே உட்கார்ந்துவிட்டாள்.

தன் மகன் முரட்டுத்தனமாக அடித்தது பற்றிக்கூட, அவள் கவலைப்படவில்லை. திருட்டுத் தனத்தோடு வாழ்கிறானே, என்று அவள் மிகவும் வேதனையுடன் அழுதாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/18&oldid=1081112" இலிருந்து மீள்விக்கப்பட்டது