பக்கம்:நல்ல கதைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


தகப்பன் இல்லாத பிள்ளை என்று, தான் கொடுத்த செல்லத்தால் தான், அவன் கள்ளனாக வளர காரணமாயிற்றோ! அவள் குழம்பினாள். மேலும் வேதனை அடைந்தாள்.

கண்ணன் ஒரு முறை தாயைப் பார்த்தான். மறு வினாடி, சமயலறையில் உள்ள அந்த ‘மூலையை’ திருட்டுத்தனமாகப் பார்த்தான்.

கண்ணன் முகத்தையே அவள் கண்கள் பார்த்துக் கொண்டிருந்தாலும், காலையில் நடந்த நிகழ்ச்சி அவள் மனத்திரையில் நிழற்படமாக ஓடிக் கொண்டிருந்தது.

வீட்டின் வாசலில் அரிசி விற்பவன் வந்து நின்றான். கையில் முறத்துடன் கண்ணணின் தாய் வந்து ஒரு படி அரிசி கேட்டு வாங்கிக் கொண்டு பணம் எடுக்க வீட்டிற்குள் சென்றாள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/19&oldid=1081113" இலிருந்து மீள்விக்கப்பட்டது