பக்கம்:நல்ல கதைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


ஏழை சொல்கிற உண்மையை நம்பக் கூட யாரும் இந்த உலகத்தில் தயாராக இல்லையே!

தலை குனிந்தவாறு வீட்டிற்குள் சென்று அழத் தொடங்கினாள். மாலை வரை அழுதுகொண்டேயிருந்தாள். வேலைக்கும் போக வில்லை. சாப்பிடவும் மனம் இல்லை.

'எல்லாம் என் தலை விதி' என்று அந்தப் பழியைத் தன் தலைமீது தாங்கிக் கொள்வதுபோல, தலையிலே கை வைத்தவாறு கமலம் உட்கார்ந்திருந்தாள்.

அம்மா! எனக்குப் பசிக்குது! கண்ணன் கொஞ்சலாக கேட்டான்.

சமயலறைப் பக்கம் போ என்று கையை நீட்டினாள் கமலம்.

என்னதான் இருந்தாலும், தன் மகனை வெறுக்க ஒரு தாய் துணிவாளா! மத்தியானம் தனக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/23&oldid=1081117" இலிருந்து மீள்விக்கப்பட்டது