பக்கம்:நல்ல கதைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நல்ல கதைகள்

24


தன்னையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறான்.

சட்டையை மீண்டும் போட்டுக் கொண்டான். தாயோ அந்த இடத்தை விட்டு அசையவே இல்லை. அங்கிருந்து போனால் தானே தானும் ஏதாவது செய்யலாம்.

மெதுவாக, சமயலறை மூலைப் பக்கம் ஓரக் கண்ணால் பார்த்தான்.

தாயோ அந்த இடத்தை விட்டு அசையவே இல்லை. தானும் வெளியே போகப்போவதில்லை.

அங்கேயே இருந்தால் தாய் சந்தேகப் படுவாளே! எப்படி நேரத்தைப் போக்குவது?

புத்தகத்தைப் படிப்பதுபோல பாசாங்கு செய்ய வேண்டும்.

அறிவு தருவதற்கு உதவாவிட்டாலும் அந்தப்புத்தகம் அவசரத்துக்கு உதவியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/26&oldid=1081120" இலிருந்து மீள்விக்கப்பட்டது