பக்கம்:நல்ல கதைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


புத்தகம் விரிந்தாலும், கண்கள் அதன் மேல் படியவில்லை, சமையலறை மூலையையே பார்த்தன.

கோழிக் குஞ்சுக்காக வட்டமிடும் கருடனின் பார்வையைப் போல, புத்தகத்தால் முகத்தை மறைத்துக் கொண்டு மூலையைப் பார்த்தான் கண்ணன்.

நேரம் ஆனதே தவிர, கமலம் அந்த இடத்தை விட்டு நகரவே இல்லை, தன் மகன் படிக்க புத்தகம் வைத்திருப்பதைக் கண்டாள், ஒருபுறம் வருத்தம் இருந்தாலும், மறுபுறம் மகிழ்ச்சி அடையத் தொடங்கினாள்.

சூரியன் மறைந்தான். இருள் வீட்டை சூழ்ந்து கொண்டது.

மண்ணெண்ணெய் விளக்கினை ஏற்ற கமலம் எழுந்திருக்க முயன்றாள். காலையிலிருந்து பட்டினி கிடந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/27&oldid=1081121" இலிருந்து மீள்விக்கப்பட்டது