பக்கம்:நல்ல கதைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நல்ல கதைகள்

26


உடம்பல்லவா! கால்கள் தள்ளாட எழுந்தாள்.

கமலம்..., கமலம்...

வாசலில் இருந்த அடுத்த வீட்டுப் பெண் ஒருத்திக் கூப்பிடும் குரல் கேட்டது. அவசரம் அவசரமாக வெளியே புறப்பட்டு போனாள்.

'இதோ வந்து விட்டேன்' என்று தாய் வெளியே புறப்பட்டதும், 'இதுதான் சரியான சமயம்' என்று நினைத்துக் கண்ணன் எழுந்தான்.

வாசலைப் பார்த்துக் கொண்டே மூலையை நோக்கிப் போகும் பொழுது திடீரென ஓர் சத்தம்.

வாசல் தடுக்கிடவே, கீழே தொப்பென்று விழுந்தாள் கமலம்.

'முன்னே பார்த்துப் போகாமல் என்னையே என்னப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்?' அதனால்தான் விழுந்தாய்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/28&oldid=1081122" இலிருந்து மீள்விக்கப்பட்டது