பக்கம்:நல்ல கதைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நல்ல கதைகள்

30


அடுத்த வீட்டுக்காரர்கள் உதவியுடன் அந்தத் தேளை அடித்துக் கொன்று விட்டு, பணத்தை எடுத்தாள் தாய்.

பொய் சொன்ன வாய் புலம்பிக் கொண்டிருந்ததையும், களவு செய்த கண்ணனின் கை கருத்தேள் கொட்டித் துடித்துக் கொண்டிருந்ததையும் கமலம் கண்டாள்!

என்னைக் கேட்டால் தந்திருப்பேனே! ஏண்டா இப்படி செய்தாய்? என்று அந்த நிலையிலும், தன் மகனை அன்புருகக் கேட்டாள். அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதாள்.

விஷம் ஏறிக் கொண்டே இருந்தது. வீறிட்டலறினான் கண்ணன்.

'கருந்தேளாச்சே! மருத்துவமனைக்குப் போனால்தான் நல்லது' என்று மற்றவர்கள் கூறினார்கள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/32&oldid=1081126" இலிருந்து மீள்விக்கப்பட்டது