பக்கம்:நல்ல கதைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


சின்னக் குழந்தை ஓடுவதுபோல, கமலம் பதறிக் கொண்டே வெளியே ஓடினாள்.

தன்னுடைய தவறுகள் தெரிந்திருந்தும், தன்னைத் தண்டிக்காமல் எவ்வளவு அன்பு தன்மீது வைத்திருக்கிறாள் தாய் என்பது அப்பொழுது தான் கண்ணனுக்குப் புரிந்தது.

சைக்கிள் ரிக்‌ஷா கொண்டு வருவதற்காகத்தான் தன் தாய் சாலைக்கு ஓடியிருக்கிறாள் என்று அங்கே உள்ளவர்கள் பேசிக் கொண்டதையும் கண்ணன் கேட்டான்.

விஷம் ஏறிக் கொண்டேயிருந்தது. இனி, "தாய்க்கு நல்ல மகனாக வாழ வேண்டும். உதவிசெய்ய வேண்டும். பள்ளிக் கூடம் ஒழுங்காகப் போக வேண்டும்" என்று அழுதுகொண்டே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/33&oldid=1081127" இலிருந்து மீள்விக்கப்பட்டது