பக்கம்:நல்ல கதைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நல்ல கதைகள்

34


2. தூக்கம் தந்த பரிசு!

'கண கண' வென்று சங்கீத இசை பாடி கடிகாரம் தன் கடமையைச் செய்தது.

மடாரென்று அதன் மண்டையிலே ஒரு மரண அடி. அடித்துக் கொண்டிருந்த கடிகாரத்தின் தொண்டை அடைத்துக் கொண்டது.

மரண அடி தந்த இடது கைக்குச் சொந்தக்காரன் மணி. புரண்டு படுத்துக் கொண்டான். போர்வையை நன்றாக இழுத்து முகத்தைப் போர்த்தி, மீண்டும் உடலை குறுக்கிக் கொண்டுதூங்க ஆரம்பித்தான்.

மணியின் தந்தை மனோகரன் வந்தார்.

மணி, மணி என்று அழைத்தார்.

'ம்' என்று முனகினான் மணி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/36&oldid=1081137" இலிருந்து மீள்விக்கப்பட்டது