பக்கம்:நல்ல கதைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


நேரமாகிவிட்டது எழுந்திரு!

'இன்னும் கொஞ்ச நேரம்பா' என்றவாறு கெஞ்சினான் மணி.

'நான் வெளியே அவசரமாகப் போகிறேன், வர அதிக நேரமாகுமே! என்ன செய்யப் போறே?'

"நான் பார்த்துக்குறேன்பா..." போர்வைக் குள்ளேயிருந்து முகத்தைக் காட்டாமலேயே பதில் சொன்னான் மணி.

வெளியிலே கார் புறப்படும் ஒலி கேட்டது. தாய் ஏதோ தன் தந்தையிடம் பேசுவதும் அவனுக்கு இலேசாகக் கேட்டது.

மீண்டும் புரண்டு படுத்தான் மணி.

நன்றாகத் தூக்கம் வருவது போல் இருந்தது. அப்படியே படுத்து இருப்பது மிகவும் இன்பமாகவும் இருந்தது மணிக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/37&oldid=1081138" இலிருந்து மீள்விக்கப்பட்டது