பக்கம்:நல்ல கதைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


போல சுவர்க் கடிகாரம் ஏழு சத்தம் போட்டு ஒய்ந்தது. அது அவனது காதில் விழுந்தாலும் கருத்தில் பதிய வில்லை.

மணியின் அன்னை அருகில் வந்து நின்றாள். முகம் போர்த்தித் தூங்குவது தவறு என்று பல முறை கூறியும் கேளாத மகனை எழுப்பினாள்.

'முகத்தை மூடிக் கொண்டு தூங்குவது தவறு'. அது களைப்பைக் கொடுத்து, சோம்பலை வளர்த்து, சுகாதரத்தையே கெடுத்துவிடும். எழுந்திரு மணி என்றாள்.

இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேம்மா! சரியா எட்டு மணிக்கு எழுந்தால் போதும். தயவுபண்ணும்மா கொஞ்சுவது போல அம்மாவிடம் கெஞ்சினான்.

தாயின் மனம் இளகிவிட்டது. தலையை ஆட்டினாள். எட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/41&oldid=1081144" இலிருந்து மீள்விக்கப்பட்டது