பக்கம்:நல்ல கதைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நல்ல கதைகள்

46


சட்டையை உள்ளே திணித்துக் கொண்டு, 'டை' கட்டிக் கொண்டான். கண்ணாடி முன்னால் நின்று கொண்டு அழகு பார்க்கக்கூட அவனுக்கு நேரமும் இல்லை. அமைதியான மனமும் இல்லை.

கார் இல்லையே என்ன செய்வது?

வேலைக்காரன் வேதாரண்யம் காய்கறிகளைச் சுமந்தவாறு மெதுவாக வந்து கொண்டிருந்தான்.

'ஓடிவா சீக்கிரம், என்று கத்தினான் மணி, வழக்கம் போல மெதுவாக, சாவகாசமாக வந்து கொண்டிருந்தான் வேலைக்காரன்.

மணி முன்னால் ஓடி, அவன் முன்னே போய் நின்று 'வாடகைக்கார்' கொண்டுவா என்றான்.

வேதாரண்யத்திற்கு ஒன்றும் புரியவில்லை. இரவில் இரண்டு மணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/48&oldid=1081150" இலிருந்து மீள்விக்கப்பட்டது