பக்கம்:நல்ல கதைகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


வரை சினிமா பார்த்துவிட்டு, காலை எட்டு மணிவரை தூங்கிவிட்டு, இப்பொழுது என்ன அவசரம்?

உடனே இன்டர்வியூவுக்குப் போகனும். சரியாக பத்து மணிக்கு நான் அங்கே இருக்கனும். சீக்கிரம் போய்வா...'

நம்ப நாட்டில் பத்துன்னா பதினோரு மணிக்குத் தான் இருக்கும். பதட்டப்படாம போகலாம் தம்பி!

'போப்பா இது வெள்ளைக்காரன், கம்பெனி... நல்ல உத்தியோகம். நிச்சயம், எனக்குத்தான் கிடைக்கும். சீக்கிரம் போய் 'டாக்சி' கொண்டு வாயேன்' என்று அவசரப்படுத்தினான் மணி.

வேலைக்குப் போகிற குழந்தை! விடியற் காலமே எழுந்திருக்கக் கூடாதா? இன்னும் ஒன்னுமே சாப்பிடலியே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_கதைகள்.pdf/49&oldid=1081151" இலிருந்து மீள்விக்கப்பட்டது